வங்காள விரிகுடா பகுதியில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, November 23rd, 2024

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அது, அடுத்துவரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக விருத்தியடையும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

000

Related posts:


ஊர்காவற்றுறையில் விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு...
பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் அமுலுக்கு வருகின்றது தடை!
அப்பாவிப்குடும்பங்களின் வாழ்க்கையைச் சிதைக்காதீர்கள்- திரிபுபடுத்தப்பட்ட செய்தியால் பாதிக்கப்பட்ட கர...