ரஜனிகாந்தனின் “கலட்டியான்” பக்திப்பாடல் வெளியீடு!

Friday, May 1st, 2026

கவிஞர் ரஜனிகாந்தனின் “கலட்டியான்” பக்தி பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா, யாழ் தென்மராட்சி, மீசாலை வடக்கு, வேம்பிராயில் அமைந்துள்ள கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தில் நேற்றிரவு (29) இடம்பெற்றது.

“கலட்டியான்” பக்திப்  பாடல் இறுவட்டை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ முரளிதர ரமானந்த குருக்கள் வெளியிட்டு வைக்க, முதல் பிரதிகளை வடக்கு மாகாண ஓய்வு நிலை பிரதம கணக்காளர் இராசையா பத்மநாதனும், நீதிமன்ற ஓய்வுநிலை பதில் பதிவாளர்
தாமோதரம்பிள்ளை மகேஸ்வரனும் பெற்றுக் கொண்டனர்.

கவிஞர் ரஜனிகாந்தனின் கவி வரிகளில் வெளிவந்த “கலட்டியான்” பக்தி பாடலை, தென்னிந்தியப் பின்னணி பாடகர் ஏ.கே.ரமேஷ்  பாட,கே.ஆர்.சுதர்சன் இசையமைத்திருந்தார்

Related posts: