இலங்கை இளநீர்களுக்கு சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பு – தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, November 1st, 2023

இலங்கை இளநீர்களுக்கு சர்வதேச சந்தையில் கேள்வி வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இவ்வாண்டில் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர , தென்னை அபிவிருத்தி சபை , இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து இலங்கையில் தென்னை பயிற்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு 11 மில்லியன் இளநீர்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் மூலம் 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருடம் இதுவரையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இளநீர்களின் தொகை 14 மில்லியன் எனவும் இதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: