யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயார் !

யுக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான தயார் நிலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இன்று அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு மாறுபட்ட விருப்பங்களுடன் பயணிப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
யுக்ரைன் பிரதேசத்தை வெற்றி கொள்ளும் தமது விருப்பத்தில் புடின் உறுதியாக இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்பதைச் செயல்படுத்தும் விருப்பத்துடன் ட்ரம்ப் இந்த சந்திப்பில் பங்கேற்கிறார்.
இந்தநிலையில் அமெரிக்காவின் ரஷ்யாவுக்கான இந்த அங்கீகாரம், மூலம் கிரெம்ளின் தலைவரைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன என்று கருதப்படுகிறது.
இதேவேளை இந்த சந்திப்பின்போது யுக்ரைனிய பிரதேசங்கள் சிலவற்றை ரஷ்யாவுக்கு வழங்கவேண்டும் என்று, புட்டின் வலியுறுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ட்ரம்ப்பும் ஏற்கனவே ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் யுக்ரைனிய ஜனாதிபதி இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தெரிவித்து வருகிறார். யுக்ரேனியர்கள் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பாளருக்கு வழங்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்து வருகிறார்
000
Related posts:
|
|