யாழ் முலவை சந்திப் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

Wednesday, July 9th, 2025

யாழ்ப்பாணம் முலவைச் சந்திக்கு அருகாமையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முலவைச் சந்தியின் அருகே  ஆலமரத்தின் கீழ் உள்ள இருக்கையில் சரிந்த நிலையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதேநேரம் உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் நேற்று இரவு குழுவாக இருந்து மதுபானம் அருந்தியதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குதித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் –

இன்று (09) அதிகாலை ஆண் ஒருவர் குறித்த பகுதியில்  நடமாடியதாகவும் அவரே இறந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இன்நிலையில் குறித்த ஆண் இறந்த நிலையில் இருந்ததை அவதானித்த மக்கள் பொலிசார் மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் குறித்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை மீட்கும் நடவடிக்கை ஈடுபடுள்ளதுடன் பொலிசார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: