அமெரிக்காவிற்கு பயணிக்க இலங்கை தாதிகளுக்கு அரிய வாய்ப்பு!
Wednesday, April 25th, 2018
அமெரிக்காவில் தொழில் செய்வதற்கு இலங்கை தாதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வாழும் தாதிகளுக்கு (ஆண் மற்றும் பெண்) அமெரிக்காவில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் KARMA சேவைஎதிர்பார்த்துள்ளது.
தாதி அனுமதிப்பத்திரம் பெற்று குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் வைத்தியசாலையில் தாதியாக சேவையாற்றிய அனுபவம், தாதி பட்டம் அல்லது டிப்ளோமா பெற்றிருத்தல்கட்டாயமானதாகும். அத்துடன் அமெரிக்க தரத்திற்கமைய சர்வதேச ஆங்கில பரீட்சை முறை சான்றிதழ் (IELTS – 6.5 – SPK 7 ) பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவில் பெற்றுக் கொள்ள முடியும்.
Related posts:
மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை!
வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு ஐந்துக்கு...
|
|
|


