Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_2b7dc09206d24cdc973ccac23c721c47, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
யாழ் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர் அதிகார துஸ்பிரயோகம் -நீதி கோரி பாதிக்கப்ப்பட்ட ஊழியர்கள் போராட்டம்! - EPDP NEWS

யாழ் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர் அதிகார துஸ்பிரயோகம் -நீதி கோரி பாதிக்கப்ப்பட்ட ஊழியர்கள் போராட்டம்!

Monday, May 11th, 2026



யாழ் கே.கே.எஸ் வீதியிலுள்ள யாழ்பாணம் பிரதேச கூட்டுறவு சங்க ஊழியர்கள்  தமக்கு முகாமைதாளரால்  விழைவிக்கப்பட்டுவரும் பிரச்சினைகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்களுக்கு தீர்வு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அத்துடன் நிறைவேற்றுச் சபை மற்றும் பொது முகாமையாளர் ஆகியோரது  செயற்றிறனற்ற  செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் பிரதேச கூட்டுறவுச் சங்கத்தின் பெரும் நிதி வீணடிக்கப்படுவதுடன் ஊழியரது நலன்களும் திட்டமிட்டு இல்லது செய்யப்பட்டு வருவதாக கூறி குறித்த கூட்டுறவு சபையின் ஆளுகைக்குள் இயங்கும் 15
சங்கங்கள் மற்றும் தலைமையக ஊழியர்கள் ஒன்றிணைந்து குறித்த பகிஸ்கரிப்பு போராட்டத்தை  முன்னெடுத்தனர்.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ் பண்ணை சந்தி பகுதியில் இருக்கும் தலைமை அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் காரணமாக கூட்டுறவு சங்கங்களின் வியாபார நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டது.

குறித்த போராட்டம் குறித்து போராட்டகாரர் தெரிவிக்கையில் –

நாம் பல ஆண்டுகளாக யாழ் நகர் கூட்டுறவு சங்கத்தின் கிளைச் சங்கங்களின் ஊழியர்களாகவும் அலுவலக ஊழியர்ககாகவும் பணியாற்றி வருகின்றோம்.

இன்நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் பணிப்பாளர் சபை மாற்றப்பட்டு புதிய பொது முகாமையாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் குறித்த பொதுமுகாமையாளர் தன்னிச்சையான செயற்பாடுகளை முன்னெடுத்து இடமாற்றங்களை மேற்கொள்வதால் ஊழியர்களின் மன நிலையுடன் கிளைகளின் வருமானமும் பாதிக்கப்படுகின்றது.

இதைவிட நுகர்வோருக்கு மலிவாக கொடுக்க வேண்டிய பொருட்கள் அனைத்தும் தனியார் கடைகளை விட கூட்டுறவு சங்கக் கிளைகளில் அதிக விலையில் விற்கப்படுகின்றது. இது கொள்வனவில் இருக்கும் சூட்சகத்தால் தான் ஏற்படுகின்றது.

வெளியில் மலிவாக கிடைக்கும் அனைத்துப்  பொருட்களும் சங்கங்களில்  அதிக விலைக்கே விற்கப்படுகின்ற நிலையில் எவ்வாறு நுகர்வோர் எம்மை நோக்கி வருவார்கள்? எப்படி நாம் வருமானத்தை காட்ட முடியும்? அல்லது எப்படி வெளி வியாபார நிலையங்களுடன் போட்டி போட்டு எமது சங்கங்களின் நிலையை மேம்படுத்த முடியும்.

இதே நேரம் ஊழியர் சேமலாப நிதியும் எமக்கு முறையாக கட்டப்படுவதில்லை. எமது பிரச்சினைகளை பொது முகாமையாளரிடம் கூறினாலும் அது தொடர்பில் அவர் அக்கறையோ அன்றி கணக்கில் எடுப்பதோ இல்லை.

இவ்வாறான நிலையில் நாம் நாளாந்தம் பல்வேறு துன்பங்களைச் தீர்வின்றி சந்தித்து வருகின்றோம்.

இதற்கு நீதி கோரியே நாம் இன்று போராட்டம் முன்னெடுக்கின்றோம். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட  நாம் கூட்டுறவு உதவி ஆணையாளருக்கும் கடிதம் கொடுத்துள்ளோம்.

இன்நிலையில் எமக்கு இவ்வாறு ஆழுமையற்ற நிர்வாகம் தேவையில்லை, இந்த பொது முகாமையாளரும் தேவையில்லை. நாம் மன உழைச்சலின்றி தொழில் செய்யும் சுய்ழலை உருவாக்கித்தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதேநேரம் குறித்த கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளரிடம் இது தொடர்பில் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது அவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனக்கூறி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: