யாழ் பல்கலை மருத்துவ மாணவர் ஏற்பாடு – யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்கும் இசை நிகழ்வு!

Thursday, July 10th, 2025

யாழ் பல்கலை மருத்துவ பீட மணவர்களின் பயிற்சிக் கல்விக்கான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதித்திரட்டலுக்காக தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் பங்குகொள்ளும் மாபெரும் இசை நிகழ்வொன்று எதிர்வரும் 19 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட மாணவர் ஒன்றிய தலைவர் மகேந்திரன் சங்கீதன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் மருத்துவ பீட பேராசிரியர் சுரேந்தகுமாரனின் பிரசன்னத்துடன் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

மருத்துவ பீட மணவர்களின் மருத்துவ செயன்முறைப் பயிற்சியை வலுப்படுத்தும் வகையில் இந்த நிதிச் சேகரிப்பு நிகழ்ச்சி திட்டம் பல்கலைக்கழகத்தின் முழுமையான அனுசரணையுடன் குறித்த நிகழ்ச்சி யாழ் திருவள்ளுவர் கலாசார மையத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.

மருத்துவ மாணவர்கள் இதுவரை நாளும் யாழ் போதனா வைத்தியசாலையில்  தமக்கான செயன்முறை பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர். தற்போது மருத்துவ மாணவர்களின் வரவு அதிகமாக இருப்பதனால் யாழ் போதனா வைத்தியசாலையுடன் தெல்லிப்பழை பிரதேச சைத்தியசாலை மற்றும்  சாவகச்சேரி வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் மாணவர்கள் சென்று தமக்கான பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

ஆனால் போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக குறித்த நேரங்களுக்கு சென்று மாணவர்களால் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அவ்வாறு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டே குறித்த நிதி சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் பல மாணவர்கள் சமூகம்சார் செயற்படுகளை நேரில் சென்று கண்டறியும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிகின்றனர்

இதனால் பல்கலை மாணவர்களை  கல்வி நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்வதற்காக பேருந்து ஒன்று தேவையாக இருக்ககின்றது.

அந்தவகையில் இந்த இசை நகழ்ச்சிக்கான முழுமையான ஒத்துழைப்பை தென்னிந்திய பின்னணிப் படகர் ஸ்ரீநிவாஸ் செய்து தர முன்வந்துள்ளார் எனவே எமது இந்த திட்டம் வெற்றிபெற தனவந்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் முன்வந்து ஒத்துழபை்பு தரவேண்டும் எனணுவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: