கணனி, கைபேசிகளால் இடம்பெறும் 90 வீதமான குற்றங்கள் மறைக்கப்படுகின்றன! – ஜனாதிபதி !

Wednesday, June 13th, 2018

இலங்கையில் கணனி மற்றும் தொலைபேசிகள் மூலம் இடம்பெறும் குற்றச் செயலில் 90 சதவீதமானவை மறைக்கப்படுவதுடன் 10 சதவீதமானவையே அறிக்கையிடப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் கைத்தொலைபேசி மூலம் மாதம் ஒன்றில் இளம் பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகமாகும் எண்ணிக்கையின் அளவு பாரதூரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கணனி மற்றும் கைத்தொலைபேசிகள் மூலம் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான பொலிஸ் அறிக்கைகளை நாடாளுமன்றத்துக்குக்கூட வழங்குவதற்கு கடினமாக உள்ளது.

அந்த எண்ணிக்கையை நான் கூறப்போவதில்லை. கைத்தொலைபேசிகள் மூலம் மாதமொன்றில் இளம் பெண் பிள்ளைகள் எவ்வளவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற விடயங்கள் எல்லாம் பாரதூரமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Related posts: