வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பொது இடங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தூய்மையாக்கப்பட்டது!

Sunday, December 30th, 2018

கடந்தவாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பாதித்த வெள்ள அனர்த்ததை அடுத்த இடம்பெயர்ந்த மக்கள் பலபொது கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதையடுத்து மழை ஒய்ந்து இயல்பு நிலை உருவாகியதன் பின்னர் மக்கள் மீளவும் தத்தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ள நிலையில் மக்கள் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாம்கள் துப்பரவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில் கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் அ.த.க.பாடசாலையின் புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அப்பாடசாலையின் மாணவர்களின் நலன் கருதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு பாடசாலை சூழலை தூய்மையாக்கி பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளனர்.

இதனிடையே இளைஞர் சம்மேளனத் தலைவரின் வேண்டுகோளிற்கமைய கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் இவ்வாறான சிரமதானப்பணிகளை கட்சியின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வைத்தியசாலை சூழலையும் தூய்மையாக்கியிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இத்தகைய மக்கள் நலன் சார் நடவடிக்கைகளுக்காக  கனகாம்பிகைக் குளம் பொதுமக்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பாடசாலை சமூகத்தினர், வைத்திய அதிகாரி மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

49345209_300639400566373_8250211822871773184_n 49211207_2293020187636881_2889084879222341632_n 49077052_2202356660092502_1637977729284440064_n 49035935_977315865799413_5627780327524007936_n 49007419_572358839894087_6135096830825857024_n 48981205_510726679422613_8253821124408770560_n 48376896_1005831596284545_969633324278480896_n 49202960_2263924523895749_8482533355601002496_n

Related posts: