யாழ். குருநகரில் வீசிய கடும் காற்று – 30 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் – மக்கள் பரிதவிப்பு!

Sunday, January 19th, 2025

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் காணம்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக குருநகர் பகுதியில் பல வீடுகளும் வணக்கஸ்தலமொன்றும் பலத்த சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அப்பகுதியில் உள்ள கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேமடைந்தன.

குறித்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட  வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.

அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதுடன் பதிப்புகள் குறித்து அனர்த்தமுகாமைத்துவ பிரிவினர் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: