நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா தொற்று : பாதுகாப்பு ஆடைகளை உற்பத்தி செய்வது தொடர்பில் இலங்கை ஆராய்வு!

Thursday, April 16th, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுதும் பாதுகாப்பு ஆடை உற்பத்திக்கு கேள்வி எழுந்துள்ளன. இதற்கமைய பாதுகாப்பு ஆடைகளை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதி செயலணி தலைவர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் கூடி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிரந்தரப் பிரதிநிதி மொறாத் மொஹதீன், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்கு ஒரு வாரத்திற்கு ஒரு மில்லியன் கையுறைகளும்,10 மில்லியன் முக்கவசங்களும் தேவைப்படுகின்றது. இந்த உற்பத்திகளை இலங்கையின் ஆடை தொழிற்சாலை ஊடாக உற்பத்தி செய்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஆடை தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு ஆடை உற்பத்திக்கு தேவையான வசதிகளை வழங்க முதலீட்டு சபையால் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  மேலும் இக்குழு தினமும் கூடி தற்போதைய நிலவரம், ஆடை உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தும் என்றும் மூன்று மாத காலத்திற்குள் இந்த பாதுகாப்பு ஆடைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் இதன்கேபாது தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts: