மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

Saturday, May 24th, 2025

யாழில்  மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  இராமசாமி சிறிகாந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்

குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் பழைய பொலிஸ் நிலைய வீதி, சுன்னாகம் பகுதியில் பூவரசு மரத்தின் தடியை வெட்டியுள்ளார்.

இதன்போது அந்த தடி மின் கம்பியில் விழுந்தது. இந்நிலையில் அவர் மீது மின்சாரம் கடுமையாக தாக்கியதால் நிலத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.  உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

000

Related posts:

இளம் கர்ப்பிணிப்பெண் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம்!
கலந்துரையாடல் ஊடாக புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாகவே நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் - நாமல் ...
முடங்கியுள்ள அரச நிர்வாகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமச...