புதிய தெங்கு ஏற்றுமதி வலயமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை – அமைச்சர் ரமேஸ் பத்திரன!

Thursday, January 6th, 2022

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் புதிய தெங்கு ஏற்றுமதி வலயம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தெங்கு சார்ந்த உற்பத்திகளில் கிடைக்கப்பெறும் அதிக கேள்வி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் தெங்கு ஏற்றுமதியால் மாத்திரம் 900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இறப்பர் ஏற்றுமதியின் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா...
கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும...
கொரோனா தொற்றினால் உலகளவில் 1 கோடியே 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - 5 இலட்சத்து 4 ஆயிரத்தி...