மாட்டு இறைச்சியை உண்ண வைத்தியர்கள் சிபார்சாம் – உணர்வு சார் விடையம் என வேலணையில் கடும் வாக்குவாதம்!
Monday, December 29th, 2025
………
வேலணை – அல்லைப்பிட்டி பகுதியில் மாட்டு இறைச்சிக் கடை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட முன்மொழிவால் சபையில் கடும் வாதப்பிரதிவாதம் நடந்த நிலையில் பொதுமக்களின் அப்பிராயம் போன்றே அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு நடைபெற்றபோது இவ்விடையம் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டபோது –
இதன்போது வேலணை இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் புனித பிரதேசமாக இருக்கின்றது.
அத்துடன் மாடுகள் இந்துக்களின் புனிதமான ஒரு உயிரினமாக இருக்கின்றன. அதே நேரம் ஏனைய மத மக்களின் உணவு தேவையாகவும் இருக்கின்றது.
அதனால் அதை இந்த புனித பிரதேசத்தில் முன்னெடுக்க கூடாது என்றும் இது தொடர்பில் மக்கள், பொது அமைப்புகள், ஆலயங்களின் நிர்வாகங்கள் உள்ளிட்ட தரப்பினரது ஆலோசனை கருத்துக்கள் பெறவேண்டும் என்றும் அதன் பின்னரே இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன் மக்களின் நுகர்வுக்காக இதற்கு அனுமதி கொடுத்தால் இப்போதிதுக்கும் சட்டவிரோத மாட்டு இறைச்சியை முன்னெடுப்பவர்கள், இந்த வியாபாரிகளுடன் இரகசிய ஒப்பந்தத்தை செய்து மேலும் அதை முன்னெடுக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காடப்பட்டது.
இதேவேளை இறைச்சி தேவையை பூர்த்தி செய்ய அதற்கு அவசியமாகும். அதன் பிரகாரம் பொது இடம் ஒன்றில் அதற்கு அனுமதி அவசியம் என்றும், வைத்தியர்கள் கூட மாட்டு இறைச்சி உண்பதே சிறந்ததென சிபார்சு செய்வதாகவும் ஒரு சில உறுப்பினர்க விவாதித்தனர்..
இதையடுத்து மக்களின் உணர்வுகள் பிரதேசத்தின் புனிதம் ஆகியவற்றின் நலன்கள் அல்லைப்பிட்டி மக்களின் கோரிக்கை என்பன பொது வெளில் ஆலோசனைக்கு விடப்பட்டு அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது
Related posts:
|
|
|


