மலேசியா எயார்லைன்ஸ் ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவிப்பு!
Tuesday, July 22nd, 2025
மலேசியா எயார்லைன்ஸ், அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விமான நிறுவனமானது ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொழும்பு – கோலாலம்பூர் வழித்தடத்தில் எயார்பஸ் A330 விமானங்களை நிறுத்தும்
ஒவ்வொரு A330 விமானமும் 27 வர்த்தக சொகுசு இருக்கைகளையும் 261 பொருளாதார வகுப்பு இருக்கை களையும் கொண்டுள்ளது.
தெற்காசியாவில் மலேசியா எயார்லைன்ஸின் இருப்பை வலுப்படுத்துவதையும், இலங்கை – மலேசியாவிற்கிடையிலான பயணம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
000
Related posts:
சிரியா தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!
வட பிராந்திய சாலை நிர்வாகத்தில் பாரிய முறைகேடு – யாழ்ப்பாணத்தில் போராட்டம்!
15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்க...
|
|
|


