சிரியா தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்!

Monday, April 16th, 2018

இரசாயன இடங்களை குறிவைத்து சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியா மீது கடந்த 13 ஆம் திகதி இரவு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்து ராக்கெட் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தன.

டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கூட்டாவில் துமா நகரை கைப்பற்ற சிரியா இராணுவம் அங்கு இரசாயன தாக்குதல் நடத்தியது. அதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு முடிவுகட்டும் நோக்கத்தில் அதிபர் பசார் -அல்-ஆசாத்துக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இரசாயன ஆயுத கிடங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிலைகளை குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

சிரியா மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க்கில் யூனியன் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டு குண்டு விச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: