மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் – 10 இலங்கையர்களின் தகவல்களுக்காக பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் அணுகல்!

Tuesday, September 12th, 2023

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 இலங்கையர்களின் தகவல்களுக்காக பல்வேறு நாடுகளின் அரச அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தை அணுகியுள்ளனர்.

46\1 மற்றும் 51\2 தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்ததைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் – நஸிவ் தகவல், ஆதாரம் என்பனவற்றை சேகரித்து ஆராய்ந்து பாதுகாத்து உறுதிப்படுத்தவும், பொருத்தமான நீதித்துறை மற்றும் தகமை வாய்ந்த அதிகாரத்துடன் உறுப்பு நாடுகளில் உள்ளவை உட்பட ஏனைய அமர்வுகளுக்கு உதவும் பொறுப்புக்கூறல் திட்டம் ஒன்று தமது அலுவலகத்தால் ஸ்தாபிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்

அதேவேளை பெயர் குறிப்பிடப்பட்ட 10 நபர்களுடன் தொடர்புபட்டவை உட்பட கோரிக்கைகள், தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளிடம் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அவர் நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: