மத்திய கிழக்கில் மூண்டது போர் – ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதல்!

Saturday, February 28th, 2026


……..
​உலகையே அதிரவைக்கும் வகையில், இன்று (28) அதிகாலை ஈரான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘ஆபரேஷன் ஷீல்ட் ஆஃப் யூதா’ (Operation Shield of Judah) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியமே போர்க்களமாக மாறியுள்ளது.

குறிப்பாக ஈரானின் இதயப் பகுதியான தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ நிலைகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களின் அலுவலகங்களை இலக்கு வைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

​அத்துடன் இது வெறும் இஸ்ரேலின் தாக்குதல் மட்டுமல்ல, அமெரிக்கப் படைகளும் இதில் நேரடியாகப் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​அத்துடன் இஸ்ரேலில் முழுமையான அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வான்பரப்பு மூடப்பட்டதால் சர்வதேச விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

​இதேவேளை ஈரானின் சாத்தியமான பதிலடித் தாக்குதலுக்கு அஞ்சி, இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பான பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இது குறித்துக் கூறுகையில், “எங்கள் நாட்டின் மீதான அச்சுறுத்தலை வேரோடு அறுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது” எனத் தெரிவித்துள்ளார்.

​இந்தத் தாக்குதல் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது.

ஒருவேளை ஈரான் பதிலடி கொடுத்தால், அது 3-ஆம் உலகப் போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

Related posts: