GSP பிளஸ் வரிச்சலுகையால் 1400 உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பு!

Tuesday, May 16th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலம் சுமார் 1400 உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு கிடைக்கும் என சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று(15) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரிய அளவில் வரிச்சலுகை கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் 1400 உற்பத்திகள் 17 நாடுகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளன. இதனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள்” என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: