மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் பிரதேச சபைகளில் திணிப்பு  – அரச அதிகாரிகள் மக்கள் நலன்களை முன்னெடுக்க நெகிழ்வுடன் செயற்படுவது அவசியம் – வேலணை பிரதேச சபையில் வலியுறுத்து!

Wednesday, September 17th, 2025


…….
மத்தியின் நிகழ்ச்சி நிரல்களை பிரதேச சபைகளில் முன்னெடுக்க சதித்திட்டம் நிகழ்ந்தேறி வருவதாக சுட்டிக்காட்டிய வேலணை பிரதேச சபையின் உறுபினர்கள் அரச அதிகாரிகள் மத்தியின் சட்டத்தை பிடித்துக்கொண்டிராது மக்கள் நலன்களை முன்நிறுத்த மக்கள் பிரதிநிதிகளுடன் நெகிழ்வுடன் செயற்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (16) சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பதில் இருக்கின்ற இடர்பாடுகள் தொடர்பில் சபை உறுப்பினர்களால் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது இவ்வாறு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் –

பிரதேசத்தின் சுகாதார செயற்பாடுகளை முழுமையாக நிவர்த்திசெய்ய ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவது அவசியம்.

குறிப்பாக குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதியில் குடிநீர் பாதுகாப்பு மலசலகூட மேம்பாடு உள்ளிட்டவை கட்டுமாணம் அல்லது மீள் திருத் செய்யப்படுவது அவசியம்.

இவ்வாறு இவற்றை முன்னெடுக்க நிதி வளம் அவசியம். பல திட்டங்களை முன்னெடுக்க பெரு நிதி தேவையாக இருக்கின்றது.

ஆனால் எமது சபை நிதி விடையத்தில் மிகவும் பின்தங்கிய  நிலையிலேயே இருப்பதால் எடுத்த எடுப்பில் எல்லா அபிவிருத்தியையும் முன்னெடுப்பது சிக்கலானது.

அதேநேரம் நயினாதீவின் கட்டுமாணக் கட்டமைப்புக்களும் மக்களின் அவிருத்தியும் கட்டமைக்கப்பட்டு அதனை வலுவான சுற்றுலா தலமாக உருவாக்குவது அவசியம்.

மக்களின் சபைக்கு மக்களின் பிரதினிதிகளுக்கும் தான் அதிகாரம் இருக்கின்றது.
அந்த மக்கள் பிரதினிதிகளின் கோரிக்கைகளை நிறைவு செய்வதில் மத்தியின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்தே அரச அதிகாரிகள் செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றனர்.

கடந்த அரசு முன்னெடுத்த திட்டங்களை பூர்த்தி செய்துவிட்டு அதற்கு திறப்புவிழா செய்கின்றனர். அதற்கு இந்த அதிகாரிகள் குடைபிடிக்கின்றனர்.

அரச அதிகாரிகளின் சட்ட நடைமுறைக்கு ஏற்ப மக்கள் நலன்களை புறக்கணித்து செயற்பட்டால் மக்களுக்கான சபைகள் தேவையற்றது என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: