அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் பதவியேற்பு!

Saturday, October 14th, 2017

இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தனவிற்கு தனது பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலக்கா ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்த்தன அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதில் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே மேலதிக செயலாளர் திருமதி ஜயசுந்தர இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts: