இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்படவில்லை – நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Tuesday, April 25th, 2023

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆரம்பித்த காலம்முதல் அதற்கு நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணையாளரும் தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லையென, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

21ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு சமகாலத்தில் ஊழல் மோசடி எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் பெருமளவிலான ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க முடியுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

மல்வத்து மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து உரையாடிய போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது – “தற்போது நடைமுறையிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு போதியளவு அதிகாரம் கிடையாது என்றும் ஊழல் மோசடி எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அந்த நிலையை இல்லாதொழிக்க முடியும்.

21ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு பின்னர், ஆணைக்குழுவுக்கு அரசியல் நியமனங்களை வழங்க முடியாது. அந்த வகையில், அரசியலமைப்பு சபையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டே அதற்கான நியமனங்களை வழங்க முடியும். சுயாதீன நபர்களை பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆணையாளர்களாக நியமிப்பதன் மூலம் ஆணைக்குழுவை பலப்படுத்த முடியும்” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: