நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேகநபர்கள் கைது!

Monday, December 18th, 2023

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 24 மணித்தியாலத்தில்  2 ,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

கைதான சந்தேகநபர்களில் 2 ஆயிரத்து 020 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 133 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் த...
உயர்தரத்தில் சித்தியடைந்தும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கான கடன் உதவித் தி...
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நூறாயிரமாகக் குறைக்க திட்டம் - ...