மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை அரசியல் பலம் மிக்கவர்களாக்க அணிதிரள வேண்டும் – காரைநகரில் செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Thursday, October 10th, 2024
தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை வெற்றியாளர் ஆக்க அணிதிரள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்களது ஆணை அதிகளவில் ஈபிடிபிக்கு கிடைக்கும் பட்சத்தில் மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதில் வலுமிக்கதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் பிரதேச வட்டார உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
கடந்த காலங்களில் எமது கருத்துக்கள் ஒருசிலரது சுயநலன்களுக்காக திட்டமிட்டு சேறுபூசல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதேநேரம் நாம் கூறிய பாதையும் வழிமுறையும் தான் சரியானது என்று இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அந்த வகையில் கார்த்திகை 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எமது வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி கொடுப்பீர்கள் என நம்புவதுடன் அதனூடாக எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


