Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_0ff1cff0f627462753ce0b33756733c3, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
மக்களை நேசித்த தோழர் ஹரிசந்திராவிற்கு அஞ்சலி மரியாதை - EPDP NEWS

மக்களை நேசித்த தோழர் ஹரிசந்திராவிற்கு அஞ்சலி மரியாதை

Sunday, June 14th, 2026


~~~~~

தேசிய நீரோட்டத்தில் எமது அரசியல் பயணம் ஆரமப்பிக்கப்பட்ட காலப் பகுதியில், எமது நடைமுறை சாத்தியமான அரசியல் மீது நம்பிக்கை வைத்து தன்னை இணைத்துக் கொண்ட தோழர் ஹரிச்சந்திராவின் மறைவு அதிர்ச்சியை வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

90 ஆண்டு வடக்கு கிழக்கை சூழ்ந்து கொண்ட யுத்த மேகங்களில் இருந்து உயிர் தப்புவதற்காக தலைநகருக்கு வந்த மக்களை பராமரிப்பதற்காக எம்மால்(ஈ பி.டி. பி) ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களுள் ஒன்றான பம்பலம்பிட்டி சரஸ்வதி முகாமின் நிர்வாகத்தினை பொறுப்பெறுத்து திறம்பட அதனை செயற்படுத்தி இருந்தார்.

தோழர் ஹரிச்சந்திராவிடம் நிர்வாக ஆளுமை இருப்பதனை அவதானித்து, அவருக்கு பல்வேறு நிர்வாக பொறுப்புக்களையும் கட்சிப் பணிகளையும் வழங்கியிருந்தேன். தொடர்ந்து மன்னார் மாவட்டத்திற்கான கட்சியின் அமைப்பாளராக நியமித்து இருந்தேன்.

பாதுகாப்பு நெருக்கடி மிக்க காலத்தில் குறித்த பொறுப்பினை தனது கடமையாக கருதிச் செயற்பட்டதுடன், அரசியல் என்பது மக்களின் வாழ்வை மேம்படுத்தும் கருவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்ட தோழர் ஹரிச்சந்திரா, எமது கட்சிக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி மன்னார் மக்களின் கோரிக்கைகளை முடிந்தளவிற்கு நிறைவேற்றவதற்காக உழைத்தார்.

அவரது தெளிவான சிந்தனை, மக்களுடனான நெருக்கம், எளிமை மற்றும் அர்ப்பணிப்பு அனைவராலும் மதிக்கப்பட்டவை. அவர் விட்டுச் சென்ற பணிகளும் கொள்கைகளும் எமக்கு வழிகாட்டியாகத் தொடரும்.

அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டக்ளஸ் தேவானந்தா,
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் ஜளநாயகக் கட்சி(ஈ.பி.டி பி)

Related posts: