மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரே மக்களின் தெரிவாக அமையும் –   செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 4th, 2024

கூச்சலிடுவதை தவிர எவ்வித நிலையான கொள்கைகளோ வேலைத்திட்டங்களோ இல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை அபரிப்பதற்காக அலைந்து திரிகின்ற மான், மரை, பூச்சிகள், புழுக்கள் மத்தியில் வீணைச் சின்னத்தை தாங்கி வரும் ஈபிடிபி மட்டுமே நிலையான அரசில் கொள்கையுடன் அதனை அடைவதற்கான வேலைத்திட்டங்களோடு மக்களோடு பயணித்து வருகின்றதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

சாவகச்சேரி நுணாவில் கிழக்கு  J/306  மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர்தெரிவிக்கையில்..

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களுக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்த முயற்சிப்பதே சிறந்தது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

000

Related posts: