பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் அடையாளம் – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
Friday, October 25th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், பொது தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் குறியீடு இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,
முன்னதாக ஜனாதிபதித் தேர்தலுக்காக இடது கையின் சுண்டு விரலில் குறியிடப்பட்டுள்ள நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடது கையின் கட்டை விரலைப் பயன்படுத்தவிருப்பதால், பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலிலோ குறியீடு இடப்படும் எடினவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
நல்லிணக்கப் பயணமாக மாத்தறையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துப் பே...
பாடப்புத்தகங்களுக்கு பதிலாக ஐ-பேட் இலத்திரனியல் சாதனம் - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!
இவ்வாண்டு 120 ஆயிரம் இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – துறைசார் அமைச்சு தகவல்!
|
|
|


