பேருந்து – லொறி மோதி விபத்து – மெக்சிகோவில் 41 பேர் உயிரிழப்பு!

Sunday, February 9th, 2025

மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில்  உள்ள கான்குனில் இருந்து  டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம்  48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி  தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் விபத்தில் 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த மேயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படுமென  உறுதியளித்துள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

000

Related posts:


நாட்டில் மேலும் 22 பேர் கொரேனா தொற்றால் உயிரிழப்பு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!
விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை - வலு...
தாமதமான சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிட தீர்மானம் - மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ந...