புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். இருப்பினும், அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் “மாணவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மண்டபத்தில் அமர வேண்டும், இரண்டாவது வினாத்தாள் முதலில் குழந்தைகளுக்கு வழங்கப்படும். இரண்டாவது வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு முடிவடையும்.

அதன் பிறகு, அரை மணி நேர இடைவேளைக்கு பின்னர் முதல் வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்படும். இந்த வினாத்தாள் ஒரு மணி நேர கால அளவு கொண்டது.

அதன்படி, அந்த வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு முடிகிறது. அதன்படி, முழு தேர்வும் மதியம் 12.15 மணிக்கு முடிவு பெறும். தேர்வின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம். இதற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்

000

Related posts: