குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த குற்றவியல் கற்கைநெறி – ஆய்வாளர் ரிச்சேட் அன்ரனி பரிந்துரை!

Tuesday, April 18th, 2017

வடக்கில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் குற்றவியல் தொடர்பான கற்கைநெறியை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும் என ஆய்வாளர் கலாநிதி ரிச்சேட் அன்ரனி தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் போருக்கு பின்னைய காலத்தில் தமிழ் இளையோர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இளையோரின் செயற்பாடுகளின் அடிப்படையில் சண்டியர் கலாசாரம், இளையோர் அரசியல் உடன்பாடு பொங்கு தமிழில் இருந்து எழுக தமிழ் வரை தமிழ் இளைஞர்களின் சினிமா நுகர்வு கலாசாரம், நினிமா நுகர்வு கலாசாரம், நவீனரக மோட்டார் சைக்கிள்களில் ஆர்வமுள்ள தமிழ் இளையோர், நவீன தொழில்நுட்ப கைத்தொலைபேநி பாவனையும் சமூக தொலைத்தொடர்பு கலாசாரமும், கிரிக்கெட் பண்பாடு, றியோ ஜஸ்கிறீம் பண்பாடு போன்ற 7 வகையிலான இளையோர் இனங்காணப்பட்டனர்.

அதில் சண்டியர் கலாசாரமும், இதனுடன் தொடர்புடைய அதிரடி வாள்வெட்டும் குழு மோதல், போதைப்பொருள் பாவனை, வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம், ஆகியன இன்று தமிழ் மக்களிடையே அடிக்கடி பேசப்படும் சமூக விவகாரங்களாக காணப்படுவதுடன் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் விவகாரமாகவும் காணப்படுகிறது, இளைஞர்களிடையே இது தொடர்பில் கலந்துரையாடிடய போது அதிகமான இளைஞர்கள் மேற்குறித்த குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதனை தெரிவித்திருந்தனர். அப்போதுதான் குறித்த குற்றச்செயல்களை குறைக்க முடியும் என தெரிவித்தனர். ஆனால் மேலைத்தேய தண்டனை முறைமைகள், எம் பண்பாட்டு புலத்துடன் இணைந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.

அனைத்திற்கும் மேலாக பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மட்டங்களில் குற்றவியல் தொடர்பான கற்கை நெறியை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய தேவையுள்ளது. அதன் மூலம் தான் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு சரியான முறையில் சென்றடையும் இது காலத்தின் தேவையாகும் என மேலும் தெரிவித்தார்.

Related posts: