வைத்தியசாலை உணவகங்களில் ஆரோக்கியமான உணவ கட்டாயம் : இதனைத் தினமும் உறுதி செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Wednesday, January 11th, 2017

வைத்தியசாலைகளில் இயங்கும் சிற்றுண்டி நிலையங்களில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுவதைத் தினமும் உறுதி செய்யுமாறு  சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி.மகிபால சகல சுகாதாரத்திணைக்களத் தலைவர்களும் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அதிகரித்துவரும் தொற்று நோய்கள் சுகதாரத் துறைக்குப் பெரும் சவாலாக உள்ளன. தொற்றா நோய்கள் எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதுடன் சுமார் 70 சதவீதத்துக்கு மேலான சாவுகளுக்கும் காரணமாக விளங்குகின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களே இந்த உலகளாவிய சவாலுக்கு காரணமாக விளங்குகின்றன.

2016ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்த வேலைத்தளங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன் நாளாந்தச் செயற்பாடுகளை ஆற்ற வேண்டுமென்ற கோட்பாட்டைப் பன்னாட்டு சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உணவு மற்றும் குடிபானங்களை சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் பெறக்கூடிய வைத்தியாசலைச் சிறிறுண்டி நிலையங்களை அமைக்க வேண்டும் எனத் திட்டம் வகுத்துள்ளது. இந்தத்திட்டம் முன்னுதாரணமாக திகழ வேண்டிய கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. வைத்தியசாலை சிற்றுண்டி நிலையங்களில் அதிகளவு சீனியிடப்பட்ட மற்றும் காபனேற்றப்பட்ட பானங்களைப் பாவனையாளாட்களக்கு ஊக்கப்படுத்தி வழங்கி வருகின்றனர்.

வைத்தியசாலை சிற்றுண்டி நிலையங்கள் வைத்தியசாலை ஊழியர்களினதும் நோயாளர்களினதும் சுகாதார மற்றும் போசாக்கு நிலைய மேம்படுத்தும் குறிக்கோள்களை கொண்டு செயற்படல் வேண்டும். மாறாக இலாப மீட்டும் இடமாக மட்டும் அமைந்து வழிவிடக்கூடாது. ஆரோக்கியமான பாதுகாப்பான உணவுகள் இயங்க நியாயமான விலையில் கிடைத்தலானது திணைக்களத் தலைவர்களால் உறுதி செய்யபட வேண்டும். ஒவ்வொரு வைத்தியசாலைச் சிற்றுண்டி நிலையமும் பல்வேறு வகையான ஆரோக்கியமான பாதுகாப்பான உணவுகளைச் சுகாதார சேவை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உணவு தயாரிக்கும் சேமிக்கும் சுற்றாடல் மற்றும் பாத்திரங்கள் அனைத்திலும் சுத்தம் பேணப்படல் வேண்டும் உணவுச் சட்டத்திற்கு அமைய உணவானது ஆரோக்கியமானதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமற்ற போசாக்கற்ற உணவு மற்றும் குடிபானங்களை விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும். சுத்தமான குடீநீரை இலவசமாக வழங்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட சேமிப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளில் உரிய வெப்பநிலை பேணப்படல் வேண்டும் போன்ற விதிமுறைகளை வைத்தியசாலை சிற்றுண்டி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டும்.

சிற்றுண்டி நிலையங்களில் ஆரோக்கியமான உணவுகளான மாச்சத்துள்ள உணவுகள், மரக்கறி, பழங்கள் புரதச் சத்துள்ள உணவுகள், குடிபானங்கள் போன்றவையும் அதிகளவு சீனி, கொழுப்பு, உப்புக் கொண்ட கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை வெய்யப் பரிந்துரை செய்யப்படுகின்றன. அதேவேளை தரமற்ற சீனி அதகளவு சேர்க்கப்பட்ட காபனேற்றப்பட்ட பானங்கள் விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றுள்ளது

palitha-720x480

Related posts:

கடந்த வருட முதற்காலாண்டை விட இந்த வருடம் மழை குறைந்துள்ளது - வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு - கல்வி அமைச்சு...
பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - அரச சேவை மாகாண சபைகள் மற்...