புங்குடுதீவு அகிலன் கொலை – மூன்று கொலையாளிகளை தேடும் பொலிசார்!

Monday, August 11th, 2025


வேலணை புங்குடிதீவில்  நேற்று (10) இரவு நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு நபர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

இறந்தவர் புங்குடுதீவு முதலாம் பிரிவைச் சேர்ந்த 46 வயதுடைய அற்புரதரசா அகிலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியவரை அவரைப் பிடிக்க முயன்ற இரண்டு பெண்கள் உட்பட மேலும் நான்கு பேரையும் குறித்த நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது

காயமடைந்த நான்கு பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவரை தேடி வருகின்றனர்.

இதே நேரம் பேருந்து உரிமையாளரான 46 வயதான அகிலன் என்பவரை. அவர் தனது வீட்டிலிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், வாள்களால்  கொடூரமாக வெட்டியதாக கூறப்படுகினது. அத்துடன் மேலும் 4 வர் காயமடைந்துள்ளனர்

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் , அகிலன் என்பவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை காயமடைந்தவர்களின் தகவலின் அடிப்படையில், அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிசார் தேடி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலவச, யோகா தியானப் பயிற்சிகள் நல்லூரில் ஆரம்பம்...
வன்னி மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாக எடுத்துரைப்பு – ஈ.பி.டி.பியின...
வடபகுதி கடற்றொழிலாளர்களின் நலன்கள் தொடர்பில் சிறந்த பொறிமுறை வேண்டும் – கடற்றொழில் அமைச்சரிடம் வடக்க...