இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலவச, யோகா தியானப் பயிற்சிகள் நல்லூரில் ஆரம்பம் 

Monday, April 17th, 2017

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆண், பெண் இருபாலாருக்குமான இலவச யோகா தியானக் கற்கை நெறியின் புதிய பிரிவு எதிர்வரும் சனிக்கிழமை(22) காலை-06.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலிலுள்ள ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த கற்கை நெறியின் ஆண்களுக்கான பிரிவு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை-06.30 மணி முதல் 07.30 மணி வரையும், பெண்களுக்கான பிரிவு அதே தினங்களில் காலை-07.30 மணி முதல் 08.30 மணி வரையும் இடம்பெறும். நோயாளர்களுக்கு விசேட கவனம் எடுத்துக் பயிற்றுவிக்கப்படும்.

மூன்று மாதங்களை உள்ளடக்கிய இந்தக் கற்கை நெறியை முழுமையாகப் பூர்த்தி செய்பவர்களுக்குப் பெறுமதியான சான்றிதழ்கள் இந்துசமய கலாசார அலுவல்கள்  திணைக்களத்தால் வழங்கப்படும். இந்த இலவச யோகா, தியானப் பயிற்சிகளில் இணைந்து பயன்பெற விரும்பும் இருபாலாரும் நல்லூர் நாவலர் மணிமண்டபத்தில் அலுவலக நேரத்தில் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பிரதமர் மஹிந்தவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை - பிரதமர் செயலகத்தின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச தெரிவ...
தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்த பின்னரான, கொரோனா பரவும் நிலை குறித்து விசேட வைத்தியர்கள் குழுவொன்றை...
பொருளாதார நெருக்கடியை வென்று மீண்டும் நாட்டில் அபிவிருத்தி போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது - ...