பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 26 பேர் பலி!

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செபு நகரின் கடற்கரைக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் அலறியத்தபடி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனர்த்தத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
|
|