அதிநவீன முச்சக்கர வண்டிகள் அறிமுகம்!

Friday, July 20th, 2018

இலங்கையில் புதிய வகை முச்சக்கர வண்டியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பால், மீன் மற்றும் மரக்கறி உட்பட இயற்கையான தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கான குளிர்சாதன வசதியைக் கொண்டதாக இது காணப்படும். அத்துடன் இயற்கை உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படுவதனை குறைத்து கொள்வதற்காக விசேடமாக இந்த முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
மலேசிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டி சூரிய சக்தியில் இயங்கவுள்ளது.
இந்த தயாரிப்பின் மூலம் மின்சாரத்திற்காக செலவிடப்படும் பெருந்தொகை பணத்தை மீதப்படுத்த முடியும் எனவும் மேலதிகமாக இந்த முச்சக்கர வண்டியில் ஒரே முறையில் 1000 லீற்றர் பால், 300 கிலோ இறைச்சி வகைகள் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக சூரிய சக்தியை பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சார்ஜ் செய்து கொள்ள கூடிய வகையில் பெட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சூழலுக்கு நெருக்கமான இந்த முச்சக்கர வண்டிகள் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: