வவுனியாவில் மீண்டும் படைப்புழுத் தாக்கம் 100 ஏக்கர் சோளச் செய்கை பாதிப்பு!

Thursday, December 5th, 2019

வவுனியாவில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சேளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுத் தாக்கம் அதிகரித்துள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சகிலாபாணு தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 500 ஏக்கரில் சேளப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 100 ஏக்கரில் படைப்புழு முற்றாகத் தாக்கியுள்ளதாக தெரிவித்த அவர் சேளப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்ற பாதுகாப்ப நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் படடப்புழு தாக்கிய சோளப் பயிர்ச்செய்கைப் பகுதிக்கு விவசாயத் திணைக்கள அதிகாரிகள் குழு நேரடியாகச் சென்ற படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கருத்த தெரிவிக்கையில்: ஆரம்ப காலத்தில் படைப்புழுவின் தாக்கம் குறைவாகக் காணப்பட்ட போதிலும் தற்போத 50 வீதம் வரையில் தோட்டங்களில் தாக்கியுள்ளது.

எனவே இது தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்க வழங்கி வருகின்றோம். இவ்வாறான தாக்கமுள்ள விவசாயிகள் உடனடியாக சோளப் பயிரின் குருத்துப் பகுதியில் சாம்பல் அல்லது மணலை பிரயோகித்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் உங்கள் பகுதி விவசாய போதனாசிரியரையோ அல்லது எமது தலைமைக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளமாறு கோருகின்றோம். இதற்குமப்பால் எமது தலைமைக்காரியாலயத்தின் 0242222324 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

Related posts: