60 வயதுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – தடுப்பூசியில் மன்னுரிமை வழங்குமாறு புதிய வழிகாட்டல் வெளியானது!

Tuesday, June 8th, 2021

இலங்கையில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்ற 12 மாவட்டங்கள் உட்பட அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலில் தடுப்பூசியை வழங்குமாறு புதிய வழிகாட்டலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தொற்றினால் மரணமடையும் வீதம் அதிகம் என்பதனால், இவர்கள் அனைவருக்கும் இத்தடுப்பூசியை வழங்குமாறு கொரோனா குழு வழங்கிய பரிந்துரைக்கமைய இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், இலங்கையின் சனத்தொகையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: