பொலித்தீன் தடையை எதிர்க்கவில்லை – உணவுத்தயாரிப்பாளர்கள்!

Tuesday, September 5th, 2017

உணவுப் பொருட்களை பொலித்தீனில் பொதியிடுவது தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை என்று உணவுத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகள் அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் இதுவரையில் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலமைக்கு மத்தியில் உணவுப் பார்சல் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சில உணவுத் தயாரிப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். உணவுத் தயாரிப்பாளர்களின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்தத் தடையை அடுத்து சிறிய வர்த்தகர்கள் பலர் சந்தைக்கு உணவு பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் போலியான பொலித்தீன் வகைகளை விநியோகிப்பதற்கு முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

மைக்ரோன் 20ற்கும் குறைவான பொலித்தீனைப் பயன்படுத்துதல், விற்பனை செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான மாற்று வழிமுறைகள் அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

Related posts: