மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு – அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Sunday, July 9th, 2023

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்..

இதுவரை 08 இலட்சம் மேற்முறையீடுகளும் 10 ஆயிரத்திற்கும் இற்கும் அதிகமான எதிர்ப்புகளும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அஸ்வெசும தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


வாரத்தில் 3 நாட்கள் அரச ஊழியர்கள் அவசியம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டும் - அரச நிர்வாக அமைச்சின் செயல...
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை மேலும் சீரழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் - அமைச்சர் பிரசன...
காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஈழ மக...