எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை மேலும் சீரழிப்பதற்கு முயற்சிக்கின்றனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, November 22nd, 2022

தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் பொருத்தமான சூழல் உள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியது அவசியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டைக் கைப்பற்றும் நோக்கில் செயற்படும் போது சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை மேலும் அராஜகமாக்குவதற்கு செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் – நாங்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே நாடு திவாலாகி விட்டதாக எதிர்க்கட்சியில் உள்ள பலர் குற்றம் சாட்டுகின்றனர் ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பலரது பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்ததை நாம் ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு தெரியும். 2019 நாம் ஆட்சிக்கு வரும்போது 2020-2021க்குள் நாட்டில் பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்று அறிந்திருந்தோம். அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் அரசு என்ற முறையில் தேவையான முடிவுகளை எடுத்து, எம்.பி.க்களுக்கு வாகன உரிமம் வழங்குவதை நிறுத்தி, தேவையற்ற பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தினோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை எதிர்க்கட்சிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயன்றன. கொவிட் தொற்று காரணமாக நாடு மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவது குறைவடைந்தது. வெளிநாட்டில் தொழிலாளர்களின் தொழில் நிறுத்தப்பட்டதால் அந்நிய செலவாணியும் நிறுத்தப்பட்டது. வேளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் பிரச்சனை ஏற்பட்டது. ஆதனால் நமது நாட்டிற்கு தேவையான மருந்துகளின் இற்குமதி குறைவடைந்தது. பொருட்கள் விலை அதிகரித்தது. 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையால் நாட்டில் போராட்டம் ஏற்பட்டது. மக்கள் கொல்லப்பட்டனர், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு, போராட்டம் வேறு பக்கம் திரும்பியது, ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வர முடியாத மக்கள் மக்களையும் மாணவர் இயக்கத்தையும் முன் நிறுத்தினார்கள். நாட்டில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி ஆட்சிக்கு வர முயற்சித்தனர். சிறிது காலம் அரசியல் அமைப்பில் மாற்றம் வர வேண்டும் என நாட்டு மக்கள் விரும்பினர், ஆனால் அது நடக்கவில்லை.

நெருக்கடி ஏற்படும் போது குற்றம் சாட்டுகின்றனர்.அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற ஜனாதிபதி பதவி விலகினார்.பிரதமர் பதவி விலகினார். நாட்டை யார் பொறுப்பேற்று நாட்டை மீட்க முடியும். ஆனால் இதனை ஏற்ற அனைவரும் அஞ்சினர். எதிர்க்கட்சியினர் சவால்களை ஏற்க அஞ்சினர். ரணில் விக்கிரமசிங்க தலைவர்; குழுவின் தனி நபராக ஏற்றுக்கொண்ட போது ஒரு கட்சியாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தீர்மானித்தோம். அந்த தியாகத்தை நாங்கள் செய்தோம், என்னை விட யாரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அதிகமாக திட்டியிருக்கவில்லை. எதிர்தரப்பினரும் அமைப்பின் மாற்றத்துடன் வேலை செய்ய நாம் இணங்கி நடந்தோம்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய தலைவரை இங்கு கொண்டு வர நினைத்தோம். இன்று அதை செய்தோம். இப்போது நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர். ஆனால் சிலர் மீண்டும் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். நாட்டில் போராட்டங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டால் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தர மாட்டார்கள். இன்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டில் குழப்பம் ஏற்பட்ட தலைமை வகிக்கின்றனர்.

அத்துடன் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை மேலும் அராஜகமாக்குவதற்கு முயற்சிக்கின்றர். இன்று நம் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம். நாங்கள் சவால்களை எதிர்த்து நாட்டை கட்டியெழுப்ப முன்வரும் போது அதனை சகிக்காத சிலர் நாட்டை குழப்ப முயற்சிக்கின்றர்.

இவ்வாறான வேளைகளில் மக்கள் நாட்டை பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கட்டுநாயக்க சீதுவ நகரசபைக்கு சொந்தமான காணியில் இந்த இருமாடி பல்நோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், கீழ் தளத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. உடற்கட்டமைப்பு நிலையம் மேல் தளத்தில் கட்டப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சீதுவ மாநகர சபையின் நித ஒதுக்கீட்டின் அடிப்படையில், இதற்காக 35 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், உடற்கட்டமைப்பு நிலையத்தின் உபகரணங்களுக்காக 10 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2022 ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 08 மாத காலக்கட்டத்தினுள் இதன் பணிகள் முடிவடைய உள்ளன.

Related posts:


இன்னும் 6 மாதங்களில் அனைத்தையும் மாற்றியமைப்போம்: யாழ் மாநகரசபை தொடர்பில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - வர்த்தக அமைச்...
சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் - சுகாதாரப் பிரி...