பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றாலும்  பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி வழங்க வேண்டும் – – பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்! 

Friday, April 3rd, 2026


……

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்கமால் இருக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேச செலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதது அவர்களின் பெற்றோரின் தவறு என்பதால், அதிகாரிகள் அந்த விஷயத்தில் ஒதுங்கியிருக்க முடியாது.

பதிவுத் திணைக்களத்தின் மூலம் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை முடியும் வரை, அத்தகைய அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்பட வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதலாம் தரத்திற்குச் சேர வேண்டிய அனைத்துப் பிள்ளைகளுக்கும், பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வகுப்பறைகளில் இருக்க வேண்டும்.

கல்வி கற்பதற்கும் வகுப்பறையில் இருப்பதற்கும் ஒரு பிள்ளைக்கு இருக்கும் உரிமைக்கு பிறப்புச் சான்றிதழ் ஒரு தடையாக இருக்கக்கூடாது எனவுன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
000

Related posts: