இந்த வருடத்தில் 4 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Monday, April 24th, 2023

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது சுற்றுலாத்துறையை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்வதற்கான உறுதியான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம், ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 779 ஆகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இந்தவருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 679 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து ஐந்தாயிரத்து 478 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில், அதிகளவானோர் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அதன்படி, இந்தியாவிலிருந்து 11 ஆயிரத்து 670 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10 ஆயிரத்து 593 சுற்றுலாப் பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: