பிரதேச சபையின் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் கலந்தாராய்வு!

Sunday, May 17th, 2026


….
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சி உறுப்பினர்களுடனான சபையின் மாதாந்தக் கூட்டம் தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்
சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஊர்காவற்றுறை பிரதேச கட்சியின் அலுவலகத்தில்
பிரதேசத்தின் நிர்வாக பொறுப்பாளர் மருதயினார் ஜெயகாந்தனின் பிரசன்னத்துடன்
நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் விடயங்கள் குறித்தும் சபையில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

குறித்த சந்திப்பின்போது பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: