இரண்டு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு 14 மில்லியன் டொலர் இழப்பு – சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கும் சலுகை – அமைச்சர் ரமேஷ் பத்திரண தகவல்!

Tuesday, December 21st, 2021

நாட்டில் கடந்த இரு வருடங்களில் சுற்றுலாத்துறைக்கு சுமார் 14 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டின் நிலைமை வழமைக் கு திரும்புவதால் விரைவில் இந்த வீழ்ச்சியானது சீராகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளா் மாநாட்டில் கலந்துகொண்டுபோதே அமைச்சர் தெரிவித்திருந்தமை குப்பிடத்தக்கது.

இதனிடையே

கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரைக்கும் சலுகைக் காலத்தை வழங்குவதற்கு 2021 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், 2021 ஏப்ரல் மாதம் தொடக்கம் கொவிட் 19 தொற்று மீண்டும் பரவியமையால் சுற்றுலாத்துறையில் எதிர்பார்க்கப்பட்ட விருத்தி ஏற்படாமையால், சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை 2021 மார்ச் மாதம் 01 திகதி தொடக்கம் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: