பாதீனியம் அற்ற பிரதேசமாக வலி.வடக்கு மாற்றப்பட வேண்டும். – விசேட பிரேரணை சமர்ப்பித்தது ஈ.பி.டி.பி

Friday, June 19th, 2026

மனித சுகாதாரத்திற்கும் கால் நடை வளர்ப்பிற்கும், விவசாய நடவடிக்ககைகளுக்கும் சவாலாக காணப்படுகின்ற பாதீனியத்தின் அச்சுறுத்தல் அற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில், குறித்த அமர்வில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர் கௌரவ பா.ஸ்ரீதரன் குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்;.

அங்கு மேலும் உiராயற்றிய கௌரவ உறுப்பினர்,

‘பாதீனியத்தினை முற்றாக அழிப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒழுங்கு விதிகளை இயற்றும் அதிகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு இருக்கின்றது. எனவே பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கும், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகளுக்காக மேய்ச்சல் தரைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்கும் தேவையான கடப்பாடு எமது பிரதேச சபைக்கு இருக்கின்றது.
எனவே, பாதீனியத்தினை எமது பிரதேச்சதில் இருந்து முற்றாக அழிப்பதற்கு தேiவாயான நடவடிக்கைகளையும், இதுதொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
எமது பிரதேச்;த்தினை பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்தினை பிரதேச சபை மாத்திரம் முன்னெடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எமது பிரதேச விவசாய அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பொது மற்றம் தன்னார்வ அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெக்கப்பட வேண்டும். அதன்மூலமே சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியும்’ என்று வலியுறுத்தினார்;.
கௌரவ உறுப்பினர் பா.ஸ்ரீதரனின் குறித்த பிரேரணை சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஈ.பி,டி.பி. பிரதேச சபை உறுப்பினரால் குறித்த சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
குறிப்பாக, காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக போக்குவரத்தில் ஈடுப்படுகின்ற பயணிகள், ஓய்வெடுப்பதற்கு பொருத்தமான கட்டிடங்களோ, குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளோ இல்லாமையினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டிய கௌரவ உறுப்பினர் பா.ஸ்ரீதரன், குறித்த விடங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேபோன்று, காங்கேசன் துறை இந்துமயானத்தில் சடலத்தினை எரிப்பதற்கு அண்மையில் ஒரு பகுதியினருக்கு அனுமதி மறுக்கப்ட்டமை தொடர்பாக சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர், எந்தவிதமான பாகுபாடும் இன்றி அனைவரும் குறித்த மயானத்தினை பயன்படுத்;துவது உறுதப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்தினையும் ஏற்றுக்கொண்ட கௌரவ தவிசாளர், எதிர்காலத்தில் எந்தவித இடையூறும் இன்றி அனைவரும் குறித்த மயானத்தினை பயன்படுத்தும் வகையிலான அறிவுறுத்தல் சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: