பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம்  ஆரம்பம்!

Monday, August 18th, 2025

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது.  

அதற்கமைய, மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் அக்டோபர் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்குரிய கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: