பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்!
Saturday, March 1st, 2025
பாகிஸ்தான் – நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள தொழுகை மண்டபத்தில் குறித்த தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் தொழுகையை முடித்துவிட்டு மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போது இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
மாணவர்களுக்கு போதனை செய்யும் தலைவரொருவரும் இதன்போது கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
ஒரு தசாப்தத்திற்குப் பின் வடக்கு தெற்கு சந்திப்பு!
கொரோனா தொற்று பரவ வாய்ப்பு: தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது – கபே அ...
அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்து விளைவிக்க குழுக்கள் முயற்சி - நாடாளுமன்ற உறுப்ப...
|
|
|


