கருணாவை விட நாட்டை பிளவுபடுத்த படுமோசமாக முற்பட்டது நல்லாட்சி – பிரதமர் மகிந்த சுட்டிக்காட்டு!

Monday, June 29th, 2020

கருணா புலிகளுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதை மறக்கவில்லை. ஆனால் 1989 ஆம் ஆண்டு புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியதையும் 2002ஆம் ஆண்டு புலிகளுடன் ஒப்பந்தம் செய்து வடக்கு மற்றும் கிழக்கினை பிரபாகரனுக்கு வழங்கிய விடயத்தையும் தற்போதைய எதிர் தரப்பினர் மறந்து விட்டார்கள் என பிரதமர் மகிந்த ராபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கருணா புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நல்லாட்சியில் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான முயற்சி இன்றும் தொடர்கிறது.

கருணா தெரிவித்த கருத்துக்களை முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர். கருணா புலிகள் அமைப்பிலிருந்தவேளை முகாமொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான படையினரின் உயிரிழப்பிற்கு காரணமாகயிருந்ததாக தெரிவித்ததை நல்லாட்சியை சேர்ந்தவர்கள் எப்படி பெரும் விடயமாக மாற்றினார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்.

நான் நவம்பர் 2005 இல் ஜனாதிபதியான பின்னர் புலிகளை முற்றாக தோற்கடித்தோம் – ஏனென்றால் கருணா அவ்வேளை பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் கைவிட்டு இராணுவபுலனாய்வாளர்களிடம் சரணடைந்திருந்தார் . கருணா புலிகளுடன் சேர்ந்து அழிந்துபோகவில்லை அவரே எங்களிற்காக புலிகளின் தலைவரின் உடலையும் அடையாளம் காட்டினார்..

2002 இல் நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்ககள் வடக்குகிழக்கை சமாதான உடன்படிக்கை என்ற போர்வையில் முற்றாக பிரபாகரனிற்கு வழங்கினார்கள் எனவும் நாட்டை பிரிப்பதற்காக புதிய அரசியல் அமைப்பிற்கான நகல்வடிவை உருவாக்கியது மட்டுமல்லாது 2019 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை சேர்த்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ள பிரதமர் கருணா பொதுமக்களை கொல்வதை நிறுத்தியிருக்கலாம், ஆனால் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: