மார்ச் மாதத்தில் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா

Friday, September 22nd, 2017

எதிர்வரும் 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபை சீர்திருத்த சட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் புதிய முறையின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஐம்பது வீதம் தொகுதிவாரி மற்றும் ஐம்பது வீதம் விகிதாசார அடிப்படையில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதற்கான எல்லைநிர்ணய ஆணைக்குழுவொன்று விரைவில் நியமிக்கப்படும். இதில் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு அங்கத்தவர்கள் இருப்பார்கள்.குறித்த ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும்.இதேவேளை, பெரும்பாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts:

யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைச் சம்பவம்: சந்தேகத்தில் கைதான இருவரின் விளக்கமறியல் நீடி...
மரணங்களின் போது மாநகரின் சிற்றூழிர்களுக்கு சிறப்பு இழப்பீடு வழங்க திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் –...
சில சேவைகள் வழமைக்கு திரும்ப 6 மாதங்கள் செல்லும் - அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!